கொண்டைக்கடலை சாதம்
2015-02-02@ 14:18:21

என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி (அ) பச்சரிசி - 2 கப்
கொண்டைக் கடலை - 3 கைப்பிடி
பெரிய வெங்காயம்-பாதி
சின்ன வெங்காயம் - 5
தக்காளிப் பழம் - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 3 பற்கள்
பச்சை மிள்காய் - 1
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிது
தயிர் - 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
கொத்துமல்லி இலை - 1 கொத்து
தாளிக்க:
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1/2 டீஸ்பூன்
முந்திரி - 5
எப்படிச் செய்வது?
கொண்டைக் கடலையை முதல் நாளே ஊற வைத்து விடவும்.இப்போது சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து நன்றாக வெந்ததும் நீரை வடித்து விடவும். அரிசியை சிறிது உப்பு போட்டு முக்கால் பதத்திற்கு வேக வைத்து ஆற வைக்கவும்.சின்ன வெங்காயம்,தக்காளியை அரைத்து வைக்கவும்.பெரிய வெங்காயம்,பச்சை மிளகாயை நறுக்கவும்.இஞ்சி, பூண்டு தட்டி வைக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாக தாளித்து,முதலில் வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிவிட்டு பிறகு இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.அடுத்து கொண்டைக் கடலையை சேர்த்து வதக்கி வெங்காயம்,தக்காளி அரைத்ததை ஊற்றி நன்றாக வதக்கவும்.அத்துடன் மிளகாய்த் தூள்,மஞ்சள் தூள்,தயிர்,உப்பு சேர்த்து வதக்கவும்.(ஏற்கனவே கடலை,சாதம் இவற்றில் உப்பு சேர்த்திருப்பதால் கொஞ்சம் குறைத்தே போட வேண்டும்).நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து சாதத்தைக் கொட்டி கிளறி மிதமான தீயில் மூடி வைக்கவும்.சிறிது நேரம் கழித்து எலுமிச்சை சாறு ஊற்றி,கொத்துமல்லி இலை தூவி ஒரு கிளறு கிளறி மூடி வைக்கவும்.இப்போது சுவையான கொண்டைக் கடலை சாதம் தயார்.
மேலும் செய்திகள்
மட்டர் மலாய்
ரோஜா பூ சட்னி
பேபி கார்ன் வெஜிடேபிள் நூடுல்ஸ்
அடை தோசை
பொரிச்ச பரோட்டா
பச்சைப் பட்டாணி சீஸ் தோசை
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!