எள் மிட்டாய்
2015-02-02@ 14:13:45

என்னென்ன தேவை?
கறுப்பு அல்லது வெள்ளை எள் - 300 கிராம்,
மண்டை வெல்லம் - 200 கிராம்,
பொடித்த வேர்க்கடலை (உடைத்தது) - 50 கிராம்,
கரைத்த கார்ன் பவுடர் - சிறிது, விருப்பமான அச்சு.
எப்படிச் செய்வது?
நல்ல தரமான எள்ளைக் கழுவி வடித்து சுத்தம் செய்து, ஒரு துணியின் மேல் நன்றாக காய வைக்கவும் (திணீஸீ அடியில்). பின் வெறும் இரும்புச்சட்டியில் வறுத்து வைத்துக் கொள்ளவும். பின் கடாயை அடுப்பில் வைத்து தேவையான தண்ணீர் ஊற்றி அதில் வெல்லத்தைத் தட்டிப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். இது கொதித்து வந்ததும் இறக்கி வடிக்கவும். பின் மீண்டும் பாகை அடுப்பில் வைத்து கம்பிப் பாகு பதத்திற்கு காய்ச்சி இறக்கி அதில் எள், வேர்க்கடலை சேர்த்து கிளறி ஒரு அச்சில் அல்லது விருப்பமான மூடியில் கார்ன் பவுடர் தடவி அதில் எள் பாகை ஊற்றவும். பின்ஆறியதும் எடுத்து வைக்கவும்.
Tags:
Good quality ellaik get cleaned washed and drained put a cloth on top of the dry well (tinisi underneath).மேலும் செய்திகள்
சிங்கப்பூரில் புது முயற்சி!: நீங்க ஆர்டர் செய்தால் போதும் மளிகை பொருட்களை வீட்டிற்கு டோர் டெலிவரி செய்யும் ரோபோ அறிமுகம்..!!
பிரிட்டன் அரசின் ஒரு மாத கால ஊரடங்கிற்கு கை மேல் பலன்!: குறையும் கொரோனா தொற்று..கடைகள், ஷாப்பிங் மால்கள் திறப்பு...மக்கள் உற்சாகம்..!!
சவூதி அரேபியாவில் ரமலான் நோன்பு தொடக்கம் : முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் இஸ்லாமியர்கள் வழிபாடு!!
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில் காஷ்மீரின் செனாப் நதி குறுக்கே உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!!
13-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்