மாதுளை - பனீர் கிரேவி
2015-01-30@ 14:25:34

என்னென்ன தேவை?
பனீர் - 1/4 கிலோ,
மாதுளம் பழம் - 1,
பூண்டு - 10 பல்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
சதுரமாக வெட்டிய குடை மிளகாய் - 1 கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 2 கொத்து,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - தேவைக்கு.
எப்படிச் செய்வது?
மாதுளம் பழத்தின் முத்துகள், மிளகாய் தூள், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவைத்து அதில் குடைமிளகாயைப் போட்டு நன்கு வதக்கவும். அதில் அரைத்த கலவை, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பிறகு பனீர் துண்டுகள் சேர்க்கவும். கறிவேப்பிலை தனியாக பொரித்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, மாதுளை மசாலாவில் சேர்த்து வெண்ணெயைப் போட்டுப் பரிமாறவும்.
Tags:
Pearls of eating pomegranates chili powder garlic and grind well please. The oil in the pan and saute well dried and put in it kutaimilakayaipமேலும் செய்திகள்
பீட்ரூட் ஆலு கட்லெட்
பச்சைப் பட்டாணி காளான் சுக்கா
புதினா மயோனைஸ்
கேரட் பஜ்ஜி
பீட்ரூட் பக்கோடா
தாமரைதண்டு வறுவல்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!