தேவையானவை:
மஞ்சள் பூசணி - 2 கப்
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி.
உப்பு - தேவைக்கேற்ப
துருவிய தேங்காய் - கால் கப்
சின்ன வெங்காயம் - 4
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, சீரகம் - கால் தேக்கரண்டி.
மிளகாய்வற்றல் - 2
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
செய்முறை:
பூசணிக்காயை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும். பின்னர், வெங்காயத்தை நறுக்கி வதக்கிக்கொள்ளவும். அதனுடன் பூசணிக்காய்த் துண்டுகளை சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். அதில் சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவிடவும். பூசணிக்காய் வெந்ததும். அதனுடன் கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவலை சேர்த்து கிளறி இறக்கவும்.



