Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

கோதுமைப் புல் சட்னி

தேவையான பொருட்கள்:

கோதுமைப் புல் 1/2 கப் (நறுக்கியது)

கொத்தமல்லி 1/2 கப்

புதினா 1/4 கப்

பச்சை மிளகாய் 2

பூண்டு 2 பல்

இஞ்சி சிறிய துண்டு

எலுமிச்சைச் சாறு 1 சிறியக் கரண்டி

உப்புத் தேவைக்கு

தேங்காய்த் துருவல் 2 மேசைக் கரண்டி (விருப்பப்படி)

தண்ணீர் தேவைக்கு.

செய்முறை:

*கோதுமைப் புல்லை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும்.

*மிக்ஸியில் கோதுமைப் புல், கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்க்கவும்.

*அதில் தேங்காய், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

*கடைசியாக எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.

*சப்பாத்தி, தோசை, இட்லியுடன் பரிமாறலாம்.

நன்மைகள்:

*உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

*ஜீரண சக்தி மேம்படும்

*உடலில் உள்ள கழிவுகளை நீக்க உதவும்

*உடல் எடை கட்டுப்பாட்டிற்கு உதவும்

*ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும்.

கோதுமைப் புல் பயன்கள்:

கோதுமைப் புல் (Wheatgrass) குளோரோபில், வைட்டமின்கள் (A, C, E) மற்றும் தாதுக்கள் நிறைந்த ஒரு சத்தான ‘‘சூப்பர்ஃபுட்” . இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், நச்சுக்களை வெளியேற்றுதல் (Detox), உடல் எடையைக் குறைத்தல், செரிமானத்தை மேம்படுத்துதல் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல் போன்ற முக்கிய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

- ஹேமலதா வாசுதேவன்.