Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கோதுமை பாயசம்

தேவையானவை:

உடைத்த கோதுமை ரவை - 1 கப்,

பாதாம், முந்திரி, திராட்சை - தலா 6,

வெல்லம் - ½ கப்,

நெய் - 2 டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - ½ கப்,

பால் - ½ டம்ளர்,

ஏலப்பொடி, கசகசா - சிறிதளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் கோதுமை ரவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து, வடிகட்டி குக்கரில் 3 டம்ளர் நீர் ஊற்றி வேக வைக்கவும். 3 விசில் வந்ததும் இறக்கவும். வாணலியில் கசகசாவை லேசாக வறுத்து எடுக்கவும். வெல்லத்தை நீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். மிக்ஸியில் வறுத்த கசகசா, தேங்காய் துருவல், சிறிது நீர் விட்டு நைசாக அரைக்கவும். இதை கொதிக்க வைத்த வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறி 5 நிமிடங்கள் வெந்தபின் வேகவைத்த கோதுமையை சேர்த்துக் கிளறிய பின் ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம், திராட்சையை சேர்க்கவும். கடைசியாக அதில் காய்ச்சிய பாலை சேர்த்து 5 நிமிடம் மிதமான சூட்டில் கொதி விட்டு இறக்கவும்.