Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

வயலட்கோஸ் கூட்டு

தேவையானவை:

பொடியாக நறுக்கிய வயலட் கோஸ் - ஒரு கப்,

பாசிப்பருப்பு - கால் கப்,

உப்பு - தேவையான அளவு,

பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் - 2,

கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,

சீரகம் - கால் டீஸ்பூன்.

தாளிக்க:

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,

கடுகு - கால் டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,

கறிவேப்பிலை - சிறிதளவு.

செய்முறை:

பாசிப்பருப்பை வேகவைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் அதில் கோஸை சேர்க்கவும்.துவரம்பருப்பு, தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தண்ணீர் விடாமல் பொடிசெய்யவும். பருப்புடன் சேர்ந்து கோஸ் வெந்ததும், இந்தப் பொடியை அதில் போடவும். எல்லாம்சேர்ந்து கொதித்து கெட்டியானதும், எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக்கொட்டி இறக்கவும்.