வெல்லம் பால் கொழுக்கட்டை
தேவையானவை:
கொழுக்கட்டை மாவு - 1/2 கப்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
சூடான தண்ணீர் - தேவையான அளவு
வெல்லம் - 200 கிராம்
தண்ணீர் - தேவையான அளவு
பால் - 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - ஒரு சிட்டிகை
திக்கான தேங்காய்ப்பால் - 1 1/2 கப்.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் கொழுக்கட்டை மாவை போட்டு, அதில் நெய், உப்பு மற்றும் சூடான தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் கையில் ஒட்டாத அளவு நன்றாக பிசைந்து கொள்ளவும். அந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் வேறொரு பாத்திரத்தை வைத்து பால் மற்றும் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பால் நன்றாக கொதித்ததும் கொழுக்கட்டை உருண்டைகளை அதில் போட்டு மிதமான தீயில் 20 நிமிடங்கள் வேக வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, வெல்லம் பாகு செய்து, அடுப்பிலிருந்து இறக்கி, பாகு, சூடு குறைந்த பிறகு, வேகவைத்துள்ள பால் கொழுக்கட்டைகளை சேர்த்து ஏலக்காயை தூவி, தேங்காய்ப்பாலையும் சேர்த்து ஒருமுறை கொதிக்க விடவும். சத்தான, சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
புழுங்கல் அரிசி காரக் கொழுக்கட்டை
தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1/2 கப்
துவரம் பருப்பு - 50 கிராம்
மிளகாய் வற்றல் - 10
உப்பு- தேவையான அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 4 ஸ்பூன்
தேங்காய் துருவல் - 1/4 கப்
கேரட் துருவல் - 1/4 கப்.
செய்முறை: புழுங்கல் அரிசி மற்றும்
துவரம் பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும். அதில் மிளகாய் வற்றல், உப்பு, தேங்காய் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த மாவை சேர்த்துக் கிளறி, தேங்காய், கேரட் துருவலையும் சேர்க்கவும். இந்தக் கலவையை மூடி வைத்து மிதமான தீயில் வேகவைத்து, முக்கால் பதம் வெந்தவுடன் கை பொருக்கும் சூட்டில், கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேக விடவும். சுவையான காரசாரமான கொழுக்கட்டை தயார்.
ராகி காரக் கொழுக்கட்டை
தேவையானவை:
ராகி மாவு - 2 கப்
அரிசி மாவு - ஒரு கப்
எண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிதளவு
தண்ணீர் - 3 கப்
உப்பு-தேவையான அளவு.
செய்முறை: ராகி மாவு, அரிசி மாவை சேர்த்து வெறும் வாணலியில் சிவக்க வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் மாவை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறி, மாவு கெட்டியானதும் இறக்கி ஆறவிடவும். கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி தட்டில் வைத்து 15 நிமிடம் ஆவியில் வேக விடவும். சத்தும் சுவையும் நிறைந்த ராகி காரக் கொழுக்கட்டை ரெடி.
அரசி ரவை கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி ரவை - 2 கப்
எண்ணெய் - 4 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 2
கறிவேப்பிலை-சிறிதளவு
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் துருவல் - ¼ கப்
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
நெய் - 1 ஸ்பூன்.
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளித்து, தண்ணீர் ஊற்றி உப்புச் சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்போது அத்துடன் தேங்காய் துருவல், பெருங்காயம், அரிசி ரவைச் சேர்த்து, நெய்யை விட்டு வெந்ததும் கீழே இறக்கவும். இந்தக் கலவை ஆறியதும் சிறு சிறு உருண்டைகள் செய்து இட்லி பானையில் வைத்து அடுப்பில் 15 நிமிடம் ஆவியில் வேக வைத்து இறக்கவும். அசத்தலான அரிசி ரவை கொழுக்கட்டை தயார்.
தேங்காய் பூரண கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி மாவு - 2 டம்ளர்
தண்ணீர் - 2 டம்ளர்
வெல்லம் - 1 டம்ளர்
துருவிய தேங்காய் - 1 கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - சிறிதளவு.
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை பாகு வைத்து, தேங்காய், ஏலக்காய் அதில் போட்டு கெட்டியானதும் இறக்கவும். வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவை அதில் போட்டு கை விடாமல் கிளறி இறக்கவும். மாவை சொப்பு செய்து, அதில் பூரணத்தை வைத்து இட்லி பானையில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கவும். சுவையான கொழுக்கட்டை தயார்.
சர்க்கரை பால் கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி மாவு - 2 டம்ளர்
தண்ணீர் - 2 டம்ளர்
வெல்லம் - 1 டம்ளர்
துருவிய தேங்காய் - 1 கப்
எண்ணெய் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - சிறிதளவு.
செய்முறை: வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை பாகு வைத்து, தேங்காய், ஏலக்காய் அதில் போட்டு கெட்டியானதும் இறக்கவும். வேறொரு வாணலியை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மாவை அதில் போட்டு கை விடாமல் கிளறி இறக்கவும். மாவை சொப்பு செய்து, அதில் பூரணத்தை வைத்து இட்லி பானையில் 15 நிமிடம் வேக வைத்து இறக்கவும். சுவையான கொழுக்கட்டை தயார்.
தானிய இனிப்பு பிடிக் கொழுக்கட்டை
தேவையானவை:
அரிசி மாவு - 1 கப்
வறுத்து அரைத்த சிறுதானிய மாவு - 1 கப்
நாட்டுச் சர்க்கரை(அ) வெல்லம் - ½ கப்
வறுத்த பாசிப்பருப்பு - 2 ஸ்பூன்
தேங்காய் துருவல் - ¼ கப்
ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்
உப்பு - சிறிதளவு.
செய்முறை: முதலில் ஒரு பாத்திரத்தில் நாட்டுச் சர்க்கரையை கொட்டி 1 கப் ெகாதிக்கும் தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். பின் வடிகட்டிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் கொட்டி சிறிது சிறிதாக வெல்லக் கரைசலை விட்டுப் பிசைந்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள மாவை இட்லி தட்டில் பிடிக் கொழுக்கடைகளாக வைத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சுவையான தானிய இனிப்பு கொழுக்கட்டை தயார்.

