Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பீர்க்கங்காய் தோல் துவையல்

தேவையான பொருள்கள்:

பீர்க்கங்காய் தோல்- 1 கப்

காய்ந்த மிளகாய் - 10

உளுந்தம் பருப்பு - 50 கிராம்

கடலை பருப்பு- 50 கிராம்

உப்பு- தேவையான அளவு

வெங்காயம்- 1

தேங்காய் துருவல்- 2 ஸ்பூன்

புளி- சிறிதளவு,

எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:

முதலில் பீர்க்கங்காயில் உள்ள தோல்களை தனியாக சீவி வைத்து கொள்ளவும். அடுத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாயை வைத்து உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவற்றை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். அதே கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் பீர்க்கங்காய் தோல், வெங்காயம், துருவிய தேங்காய் மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வதக்கி கொள்ளவும். இரண்டு கலவையும் சூடு ஆற வைத்த பின்னர் மிக்சியில் தேவையான தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளளவும். பத்தே நிமிடத்தில் சுவையான பீர்க்கங்காய் தோல் துவையல் தயார்.