தேவையான பொருட்கள்:
கடலைமாவு _2 கப்
முட்டைகோஸ் _1 கப் (துருவியது)
காரட் _1 கப் (துருவியது)
தேங்காய்துருவல் _1 கப்
மிளகாய்தூள் _2 ஸ்பூன்
உப்பு _ தேவைக்கு
பெருங்காயத்தூள் _1/2 ஸ்பூன்
கரம்மசாலாத்தூள் _1 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் _2 ஸ்பூன்
சமையல்சோடா _2 ஸ்பூன்
புளித்தமோர் _11/2 கப், கறிவேப்பிலை, மல்லித்தழை -தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு துருவிய காரட், கோஸ் தேங்காய்துருவல், உப்பு மிளகாய்தூள், கரம்மசாலா, சமையல்சோடா, மோர் பெருங்காயத்தூள், எண்ணெய் எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும், கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் கலந்துக்கொள்ளவும்.மாவு இட்லி பதத்தில் இருக்கவேண்டும். குக்கர் உள் பாத்திரத்தில் நெய் அல்லது எண்ணெய் லேசாக தடவி கலவையை ஊற்றவும். குக்கரை அடுப்பில் வைத்து இரண்டு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். ஆறியதும் குக்கரைத் திறந்து கறிவேப்பிலை, மல்லித்தழை நறுக்கி தூவவும். கத்தியால் துண்டுகள் போட்டு எடுத்தால் கேக் போல மிருதுவாக இருக்கும்.


