Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

கரும்பு அல்வா

தேவையான பொருட்கள்:

கரும்பு

வெல்லம் - தேவையான அளவு

முந்திரி, உலர் திராட்சை - தேவையான அளவு

கோதுமை மாவு - 1 கப்

கார்ன் ப்ளவர் மாவு - 1 கப்

செய்முறை:

வீட்டில் இருக்கும் கரும்புகளை சாறாக எடுத்து கொள்ளவும். பீஸ் பீஸாக வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்தால் கூட சாறு கிடைத்துவிடும். இதை தொடர்ந்து வெல்லத்தை வானலியில் போட்டு கொதிக்க விட வேண்டும். அது தண்ணீராக மாறிய பிறகு தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். கரைந்தால் மட்டும் போதும். பிசுபிசு தன்மை வரை காத்திருக்க தேவையில்லை.பிறகு நெய்யில் முந்திரி, உலர் திராட்சை போட்டு வதக்கி கொள்ளவும். அதை தனியாக எடுத்து வைத்துவிட்டு அதில், கரும்பு சாறை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அது கொதித்து கொண்டு இருக்கும் போதே, கோதுமை மாவையும், கார்ன் ப்ளவர் மாவையும் சேர்த்து கட்டி கட்டியாகாமல் கரைக்க வேண்டும். நன்றாக கரைந்து கூல் பதத்திற்கு வந்த பிறகு வெல்ல பாகுவை ஊற்றி நன்கு கிளற வேண்டும். அது அல்வா பதத்திற்கு வந்த பிறகு கடைசியாக வறுத்து வைத்திருக்கும் முந்திரி, திராட்சையை போட்டு கிளறினால் டேஸ்டியான கரும்பு அல்வா ரெடி.