தேவையானவை:
புழுங்கல் அரிசி - 400 கிராம்
வெல்லம் - 200 கிராம்
தேங்காய் - ½ மூடி (துருவியது)
ஏலக்காய் - 8
ஊறவைத்த கடலைப்பருப்பு - 50 கிராம்
பயத்தம் பருப்பு - 50 கிராம்
நெய் - 2 ஸ்பூன்.
செய்முறை:
புழுங்கல் அரிசியை கழுவி காயவைத்துக் கொள்ளவும். வாணலியில் அரிசியை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அத்துடன் பயத்தம் பருப்பையும் வறுத்து மிக்சியில் நைஸ் ரவையாக பொடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு அதில் வெல்லத்தை சேர்த்து கரைந்ததும் வடிகட்டி பின்பு அதை கொதிக்க விடவும். அதில் ஊறவைத்த கடலைப்பருப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கிளறி நெய் விட்டு மூடி வைக்கவும். கொஞ்சம் ஆறியதும் சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான இனிப்பு கொழுக்கட்டை ரெடி.



