தேவையான பொருட்கள்.
சர்க்கரைவள்ளி கிழங்கு-2 கப்.
பட்டாணி-1கப்.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்-1 குழிக்கரண்டி.
கடுகு-1 தேக்கரண்டி.
உளுந்து-1 தேக்கரண்டி.
சீரகம்-1 தேக்கரண்டி.
காருவேப்பிலை-சிறிதளவு.
வரமிளகாய்-2.
வெங்காயம்-1.
தக்காளி-1.
பச்சை மிளகாய்-1.
இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.
மஞ்சள்தூள்-1/4 தேக்கரண்டி.
மல்லித்தூள்-1 தேக்கரண்டி.
மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.
கொத்தமல்லி-சிறிதளவு.
செய்முறை
முதலில் சர்க்கரைவள்ளி கிழங்கை நன்றாக கழுவிவிட்டு தோல் நீக்கிய பிறகு சிறிது சிறிதாக நறுக்கி 2 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். அத்துடன் 1 கப் பட்டாணியை சேர்த்து தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக்கொள்ளவும்.இப்போது கடாயில் எண்ணெய் 1 குழிக்கரண்டி, கடுகு 1 தேக்கரண்டி, உளுந்து 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2, கருவேப்பிலை சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய பச்சை மிளகாய் 1 சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி, நறுக்கிய தக்காளி 1, உப்பு தேவையான அளவு சேர்த்து தக்காளி கரைந்து வரும் அளவிற்கு வதக்கவும்.மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, மல்லித்தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கிவிட்டு வேக வைத்திருக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு, பட்டாணியை சேர்த்து அத்துடன் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து நன்றாக பிரட்டிவிடவும். அவ்வளவுதான் சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு பட்டாணி மசாலா தயார்.



