தேவையானவை:
இளசான கத்தரிக்காய் - 300 கிராம்
வெங்காயம் -2
புளி - எலுமிச்சை அளவு.
மசாலாவிற்கு:
கடலைப்பருப்பு - 4 மேஜைக்கரண்டி
வெந்தயம், தனியா - தலா 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 6
உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - ஒரு தேக்கரண்டி.
செய்முறை: மசாலாவிற்கு தேவையானதை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்யவும். புளியையும் நறுக்கிய வெங்காயத்தையும் அரைத்து விழுதாக்கி மசாலாவுடன் சேர்க்கவும். அத்துடன் உப்பையும் சேர்க்கவும். கத்தரிக்காயை காம்பை நீக்கி, அடியில் ஒன்றாக இருக்கும்படி நான்காகப் பிளக்கவும். முழுக் கத்தரிக்காயின் பிளந்த இடைவெளியில் மசாலாவை அடைத்து வைக்கவும். வாணலியை அடுப்பில் வைத்து நிதானமாக எரிய விட்டு கடுகுப் போட்டு வெடித்ததும், மசாலா அடைத்த முழுக் கத்தரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும். காய் நன்றாக வெந்து நிறம் மாறிய பின் அடுப்பை அணைக்கவும்.


