Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ரோட்டுக்கடை எக் ரைஸ் ரெசிபி

தேவையான பொருட்கள்:

சாதம் வேக வைக்க: அரிசி -1 கப்

தேவையான அளவு தண்ணீர்

உப்பு - அரை ஸ்பூன்

எண்ணெய் - 1 ஸ்பூன்

முட்டையை சமைக்க:

முட்டை - 5

மிளகுத்தூள் - 2 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எக் ரைஸ் செய்ய:

நெய் -1 ஸ்பூன்

எண்ணெய் 1 ஸ்பூன்

நறுக்கிய வெங்காயம் 1/4 கப்

இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்

கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்

சோயா சாஸ் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சிறிது நறுக்கிய கொத்தமல்லி

மிளகுத்தூள் - 2 ஸ்பூன்

செய்முறை:

*அரிசியை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

*அரிசி ஊரும் போது முட்டைகளை உடைத்து, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சேர்த்து நன்கு அடித்துத் தயார் நிலையில் வைக்கவும்.

*அரிசியை ஊறவைத்த பிறகு, தண்ணீரை வடித்துவிட்டு, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அது கொதித்ததும், உப்பு மற்றும் எண்ணெய் சேர்க்கவும்.

*ஊறவைத்த அரிசியை அதில் போட்டு, 90% வேகும் வரை சமைத்து, தண்ணீரை வடித்து ஆறவிடவும்.

*ஒரு கடாயை அடுப்பில் வைத்து, வெண்ணெய் மற்றும் நெய்யைச் சேர்த்து சூடாக்கவும்.

*பின்னர் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி-பூண்டு விழுதை சேர்க்கவும்.

*பச்சை வாசனை போனதும், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்க்கவும்.

*நன்றாக வதக்கிய பிறகு, அடி பிடிக்காமல் இருக்க சிறிது தண்ணீர் சேர்க்கவும். இப்போது கிரேவிக்குத் தேவையான உப்பைச் சேர்க்கவும்.

*எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் சோயா சாஸை சேர்க்கவும். பின்னர் அதில் அடித்து வைத்திருக்கும் முட்டையை சேர்க்கவும்.

*முட்டை பொரியத் தொடங்கியதும் நன்கு கிளறவும். பின்னர் நீரை வடித்து வைத்துள்ள சமைத்த சாதத்தைச் சேர்க்கவும்.

*நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிய பின் அடுப்பை அணைக்கவும்.

*அவ்வளவுதான் சூடான ரோட்டுக்கடை எக் ரைஸ் ரெடி. சூடாக சாப்பிடவும்.