Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்பினாச் கீரை கூட்டு

தேவையான பொருட்கள்

5 கப் கீரை

2 கப் பயத்தம் பருப்பு தோலுடன்

1 மேஜை கரண்டி நல்லெண்ணெய்

1 தேக்கரண்டி பெருஞ்சீரகம்

1 தேக்கரண்டி கடுகு

1 தேக்கரண்டி வெந்தயம்

½ தேக்கரண்டி பெருங்காயப் பொடி

2கார மிளகாய்

கூழ்:

1 மேஜை கரண்டி உளுந்து

1 மேஜை கரண்டி கடலை பருப்பு

1 மேஜை கரண்டி கொத்தமல்லி விதை

1 மேஜை கரண்டி மிளகு

1 தேக்கரண்டி கசகசா

5 கார வர மிளகாய்

½ கப் தேங்காய் துண்டுகள்

2 அங்குலம் இஞ்சி

4 பூண்டு

1 கப் தேங்காய் பால்

1. தேவையானஉப்பு

செய்முறை:

ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள்.தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் பயத்தம் பருப்போடு 4 கப் நீர் சேர்த்து குக்கரில் வேகவைக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் பெருஞ்சீரகம். கடுகு, பெருங்காயப் பொடி போட்டு தாளித்து கொள்ளுங்கள். கீரையை நன்றாக கழுவுங்கள். கீரையை கூட சேர்த்து வதக்குங்கள். 2 கப் நீர் சேர்த்து வேக வைக்க.வேகவைத்த பருப்பை சேர்த்து கொதிக்க வையுங்கள்.கீரை வெந்துகொண்டிருக்கும் பொழுது கூழை தயார் பண்ணுங்கள். உளுந்து, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, வர மிளகாய், வெந்தயம், மிளகு, கச கசா அனைத்தயும் மிதமான நெருப்பின் மேல் இருக்கும் வாணலியில் வறுத்துக் கொள்ளுங்கள், வாசனை வரும், பருப்பு பொன்னிறமாகும்.வறுத்த பொருட்களை நீரில் ஊற வையுங்கள். தேங்காய் துண்டுகள், இஞ்சி பூண்டு, கூட சேர்த்து அறைத்து கொள்ளுங்கள். 7. கூழை கீரை பருப்போடு சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான நெருப்பின் மேல் கொதிக்க வையுங்கள், தேங்காய் பால் சேர்த்தது கிளற. உப்பு சேர்த்து ½ எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளருங்கள். சுவையான சத்தான மணமான கீரை கூட்டு தயார். பரிமாறுவதற்க்கு முன் சுவைத்து பாருங்கள். சோறு, நெய், கீரை, ஊறுகாய் நான்கும் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். வறுவலும் சேர்த்து கொள்ளுங்கள்.