Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கொய்யா கார அவல்

தேவையான பொருட்கள்:

*அவல் - 1 கப்

*நன்றாக பழுத்த கொய்யா - 1 ( பழுத்த பழமாகவும் இல்லாமல் காயாகவும் இல்லாமல்)

*காய்ந்த மிளகாய் - 1 அல்லது 2

*கருவேப்பிலை - சிறிதளவு

*கடுகு - அரை டீஸ்பூன்

*உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

*கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

*மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்

*உப்பு - தேவைக்கு

*எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை:

*அவலை நன்றாக கழுவி 5 நிமிடம் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

*ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்.

*அதில் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். பிறகு *அடுப்பை அணைக்கவும். மிக்ஸியில் அவல் ஊறுவதற்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொய்யா சேர்த்து அரைத்து வடிகட்டி ஊற்றவும்.

*அவலை சேர்த்து மெதுவாக கலக்கவும். 10 நிமிடம் ஊற விடவும். சுவையான கொய்யா கார அவல் தயார்.

மருத்துவ பயன்கள் :

*கொய்யாவில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

*உடல் எடை குறைக்க உதவும்.

*வைட்டமின் சி அதிகம் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

*இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

*அவல் உடனடி சக்தி அளிக்கும்.