Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மசாலா மோர்!

தேவையான பொருட்கள்

கெட்டித் தயிர் - 2 கப்

தண்ணீர் - 2 கப்

கொத்தமல்லி - 4 டீஸ்பூன்

மோர் மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு.

தாளிக்க…

எண்ணெய் - 2டீஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

பெருங்காயம் ¼ டீஸ்பூன்.

அரைக்க…

பச்சை மிளகாய் - 1/2

கறிவேப்பிலை - 6 இலை

இஞ்சி - 1/4 இன்ச்.

மசாலா மோர் செய்முறை

முதலில் 2 கப் தயிரை நன்றாக அடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

இதன்பின்னர், மிக்சி எடுத்து அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ளவும். பின்னர் முன்பு மிக்சியில் அரைத்து வைத்துள்ள கலவையை மோரில் சேர்த்துக்கொள்ளவும். மோர் மிளகாயை உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.சில்லென மசாலா மோர் தயார்.

மோர் பயன்கள்

உடலுக்குத் தேவையான குளிர்ச்சியை உண்டாக்கும். வெயில் காலத்தில் காரமாக, அல்லது அதிக மசாலா கொண்ட உணவுகள் உண்பதால் சிலருக்கு வயிற்று எரிச்சல், கடுப்பு போன்ற உபாதைகள் உண்டாகும். அவர்கள் ஒரு டம்ளர் மோர் குடிக்க வயிற்று எரிச்சல் கட்டுப்படும். சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் சில மருந்துகளுக்கு இணைக்கலவையாக மோர் பயன்படுகிறது. உடலுக்கு எவ்விதமான தீங்கையும் உண்டாக்காத காரணத்தால் மோரானது பத்தியத்தின் போதுகூடப் பயன்படுத்தக் கூடிய உணவு வகைகளுள் ஒன்று. மூலம் மற்றும் கருப்பை நோய்களுக்கு, கற்றாழைக் கூழை மோரோடு கலந்து குடிப்பது மிகச் சிறந்தது. பொதுவாகவே வெயில் காலங்களில் தண்ணீர் பாட்டில்களை நீரை நிரப்பிச் செல்வதற்கு பதில் மோர் கலந்து கொண்டு செல்வதால் உடல்சூடு சார்ந்த பல பிரச்னைகளுக்கும் நல்ல மருந்தாக அமையும்.

- எஸ். விஜயலட்சுமி.