Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

சோயா பட்டாணி சால்னா

தேவையான பொருட்கள்.

எண்ணெய்-1 குழிக்கரண்டி.

பட்டை-1

லவங்கம்-1

ஏலக்காய்-2

சோம்பு-1 தேக்கரண்டி.

கருவேப்பிலை-சிறிதளவு.

பச்சை மிளகாய்-2

வெங்காயம்-1

தக்காளி-1

இஞ்சிபூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

சோயா-1 கப்.

பட்டாணி-1 கப்.

உப்பு-தேவையான அளவு.

பேஸ்ட் செய்ய,

தேங்காய்-1கப்.

கசகசா-1 தேக்கரண்டி.

மிளகு-1 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

முந்திரி-10

பொட்டுக்கடலை-1/2 கப்.

செய்முறை

முதலில் கடாயில் 1 குழிக்கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பட்டை 1, லவங்கம் 1, ஏலக்காய் 2, சோம்பு 1 தேக்கரண்டி, கருவேப்பிலை சிறிதளவு, நறுக்கிய பச்சை மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 1, இஞ்சிபூண்டு பேஸ்ட் 1 தேக்கரண்டி சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு நறுக்கிய தக்காளி 1, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு சிறிதளவு சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது ஊறவைத்த சோயா 1 கப், பட்டாணி 1 கப் சேர்த்து தண்ணீர் விட்டு வேகவிடவும். இப்போது மிக்ஸியில் தேங்காய்1 கப், முந்திரி 10, பொட்டுக்கடலை ½ கப், கசகசா 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, சோம்பு 1 தேக்கரண்டி ஆகியவற்றுடன் தண்ணீர் சிறிது சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். இப்போது இதை சோயா பட்டாணியுடன் சேர்த்து உப்பு தேவையான அளவு சேர்த்து தண்ணீர் விட்டு நன்றாக சுண்டும் அளவிற்கு வேகவைத்து எடுத்தால் சுவையான சோயா பட்டாணி சால்னா தயார்.