Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஜவ்வரிசி வெள்ளரி விதை உருண்டை

தேவையானவை:

முழு ஜவ்வரிசி - 1 கப் (உடைந்தவற்றை நீக்கி விடவும்),

வெல்லம் - ¾ கப்,

வறுத்த வெள்ளரி விதை - 10 கிராம்,

நெய் - ½ டீஸ்பூன்,

ஏலக்காய்த் தூள் - ¼ டீஸ்பூன்,

நெய், எண்ணெய் கலவை - 200 கிராம்.

செய்முறை:

நெய், எண்ணெய் கலவையை வாணலியில் ஊற்றி சூடாக்கி ஜவ்வரிசி நிறம் மாறாது வெளுக்கப் பொரித்து டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். இத்துடன் ஏலக்காய்த் தூள், வறுத்த வெள்ளரி விதை சேர்க்கவும். வெல்லத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைய விட்டு வடிகட்டி அடுப்பில் ஏற்றி உருண்டைப் பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகுடன் ஜவ்வரிசி கலவையை சேர்த்து கையில் நெய்தடவி உருண்டைகள் பிடிக்கவும்.