Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிங்கள் புவா (உத்தரகாண்ட்)

தேவையானவை:

ரவை - 1 கப்,

சர்க்கரை - ¾ கப்,

யோகர்ட் - ½ கப்,

சோம்பு - ½ டீஸ்பூன்,

வாழைப்பழம் (நன்கு பழுத்தது) -1,

ஏலக்காய் தூள் - ½ டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் (எண்ணெய் தவிர) ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.

அப்படியே 1 மணி நேரம் ஊறவிடவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டுப் பொன்னிறமாக வெந்ததும் எண்ணெய் வடித்து எடுக்க ‘சிங்கள் புவா’ தயார்.