தேவையானவை:
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 200 கிராம்,
வெல்லம் - 100 கிராம்,
ஏலப்பொடி - 1 டீஸ்பூன்,
நெய் - 1 டீஸ்பூன்.
செய்முறை:
ஒரு கப் தண்ணீரை வெல்லத்தில் சேர்த்து குறைந்த தீயில் ஒரு வாணலியில் வைத்து இளக விட வேண்டும். வடிகட்டி மேலே படிந்த அழுக்கை நீக்க வேண்டும். மறுபடியும் மிதமான தீயில் ஐந்து நிமிடங்கள் வைக்க வேண்டும். சர்க்கரைவள்ளிக்கிழங்கை வேக வைத்து உரித்து ஆறியபின் வில்லைகளாக நறுக்கி வெல்லப் பாகில் போட வேண்டும். ஏலப்பொடி சேர்த்து இரண்டு நிமிடம் கிளற வேண்டும். நெய்யை உருக்கி ஊற்றி அதில் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி நிவேதனம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கலாம்.


