தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - 100 கிராம்,
பெரிய வெங்காயம் -2
தக்காளி -2
காய்ந்த மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகாய் தூள் -1 தேக்கரண்டி
மல்லித்தூள் -1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
தேங்காய்ப்பால் - 1 மேசைக் கரண்டி
கடலை எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு.
கொத்தமல்லி தழை - நறுக்கியது
செய்முறை:
வேர்க்கடலையை கழுவி சுத்தம் செய்து 2 மணி நேரம் ஊறவைத்து பிறகு குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு முதலில் வெங்காயத்தினை பொன்னிறமாக வதக்கவும், அதற்கு பிறகு தக்காளியை பச்சை வாடை போக நன்கு வதக்கி கொள்ளவும். பின்னர் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும்.அந்தக் கலவையில் தேங்காய் பாலை ஊற்றி கிளறிவிடவும், வேகவைத்த கடலையை அதனுள் சேர்த்து கொதிக்க விடவும், தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். சில நிமிடங்களில் நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி இறக்கி விடவும்.

