Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கம்பு பிரவுனி

தேவையான பொருட்கள்

கம்பு மாவு - 3/4 கப்

முட்டை - 2

சர்க்கரை - 1/2 கப்

சன் ஃபிளவர் ரீஃபைண்ட் ஆயில் - 3/4 கப்

கோகோ பவுடர் - 1/2 கப்

வெனிலா எசன்ஸ் - 1 டேபிள் ஸ்பூன்

பேக்கிங் பவுடர் - 1/4 டேபிள் ஸ்பூன்

காபி தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்

நறுக்கிய சாக்லேட் துண்டுகள் - 1/4 கப்

சிசீலிங் தட்டு - 2

ஐஸ்க்ரீம் - 2 ஸ்கூப்

சாக்லேட் சாஸ் - 3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் இரண்டு முட்டை, 1/2 கப் சர்க்கரை, 3/4 கப் சன் ஃபிளவர் ரீஃபைண்ட் ஆயில் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் அதில் 1/2 கப் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக சர்க்கரை கரையும் வரை கலந்து கொள்ளவும். இதில் 1 டேபிள் ஸ்பூன் வெனிலா எசன்ஸ், 1/4 டேபிள் ஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4 டீஸ்பூன் உப்பு, 1/2 டேபிள் ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இப்பொழுது இதில் 3/4 கப் கம்பு மாவு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனுடன் 1/4 கப் சிறிதாக நறுக்கிய சாக்லேட் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்பொழுது அதை ஒரு கேக் டின்னில் மாற்றிக் கொள்ளவும். (கேக் டின் மேல் பேக்கிங் ஷீட் போட்டுக் கொள்ளவும்). இதை ஓவனில் 180°C 25 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பேக் செய்து கொள்ளவும். இப்பொழுது சிசீலிங் தட்டை சூடுபடுத்திய பின் அதன் மேல் ஒரு பிரவுனி துண்டு வைத்துக் கொள்ளவும். அதனுடன் ஐஸ்கிரீம் மற்றும் சாக்லேட் சாஸ் சேர்த்து பரிமாறவும்.