Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பொட்டுக்கடலை பூர்ண பணியாரம்

தேவையான பொருட்கள்: பொட்டுக்கடலை பூரணத்திற்கு;

*பொட்டுக்கடலை - 1/2 கப்

*நறுக்கிய தேங்காய் - 1/2 கப்

*பொடித்த வெல்லம் - 1/2 கப்

* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்

* நெய் - 1 ஸ்பூன்

* ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை

வெளிமாவிற்கு;

* புளிப்பில்லாத இட்லி மாவு

*அரிசி மாவு - 2 ஸ்பூன்

*ஏலக்காய் தூள் - 2 சிட்டிகை

*உப்பு - 2 சிட்டிகை

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து கொரகொரவென்று அரைத்து, ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதே ஜாரில் நறுக்கிய தேங்காயை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி, கரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.

* பின்பு அதில் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

* பிறகு அதில் வெல்ல நீரை வடிகட்டி சேர்த்து, ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறி, ஈரப்பதம் போகும் அளவில் கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து மேல் மாவிற்கு புளிப்பில்லாத இட்லி மாவை எடுத்து, அத்துடன் அரிசி மாவு, ஏலக்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கட்டிகளின்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

* பின்னர் பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, குழிகளில் நெய் ஊற்றி, பின் ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து, இட்லி மாவில் போட்டு, குழிக்கரண்டியால் எடுத்து, பணியாரக் குழிகளில் ஊற்றி மிதமான தீயில் வைத்து முன்னும் பின்னும் பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுத்தால், பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் தயார்.