தேவையானவை:
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
இஞ்சி - சிறிதளவு
வெங்காயம்
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
உப்பு
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவுடன் எண்ணெயை தவிர மேற்கூறிய பொருட்களை போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து, சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வாணலியில் எண்ணெய் காய்ந்தவுடன் போட்டு எடுத்தால் சுவையான மொறு மொறு சத்தான பொட்டுக்கடலை பக்கோடா தயார்.



