Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கம்பு பொங்கல்

தேவையான பொருட்கள்

கம்பு - 1 கப்

பச்சரிசி - 1/2 கப்

பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

வெல்லம் - 11/2 கப்

ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன் ஸ்பூன்

நெய் - ஒரு குழி கரண்டி

காய்ச்சிய பால் - 1/2 டம்ளர்

முந்திரி - விருப்பம் போல்

செய்முறை :

கம்பை 3 மணி நேரம் ஊறவைத்து கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் கம்பிற்கு மூன்று கப் தண்ணீர் வைக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து மூன்று பங்கு தண்ணீர் ஊற்றி, பாசிப்பருப்பை சேர்த்து குக்கரில் கம்பு மற்றும் அரிசியை தனித்தனியாக வேக வைத்து எடுக்கவும். பிறகு இரண்டையும் ஒன்றாக கலந்து வெல்லத்தை பாகு காய்ச்சி ஊற்றவும். (வெல்லம் பாகு பதத்திற்கு காய்ச்ச வேண்டிய தேவை இல்லை. சிறிது நேரம் கொதிக்க விட்டு எடுத்தாலே போதும்.) அடுப்பின் அனலை குறைத்து நன்கு கிளறவும். நெய் ஊற்றவும். முந்திரி நெய்யில் வறுத்து சேர்க்கவும். பாலையும், ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு கிளறவும். சுவையான கம்பு பொங்கல் தயார்.