தேவையானவை:
பச்சரிசியை உடைத்த ரவை - 1 கப்,
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - ½ கப்,
காய்ந்த மிளகாய் - 3,
உப்பு - தேவையான அளவு,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு.
செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, மேற் கூறிய பொருட்கள் உப்பு, தேங்காய் துருவல் தவிர மற்றவற்றை சேர்த்து தாளித்து 2½ கப் நீர் ஊற்றி அதில் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். அரிசி ரவையை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கிளறி விட்டு மூடி வைக்கவும். அடிக்கடி திறந்து பார்த்து கிளறி விட வேண்டும். அடுப்பை சிறிய தீயில் வைத்து பிறகு அணைத்து விடவும். தேங்காய் சட்னி, கொஸ்துவுடன் சாப்பிட மிக ருசியான பலகாரம்.


