தேவையானவை:
புழுங்கல் அரிசி - 1 கிலோ
பொட்டுக்கடலை - ¼ கிலோ
வற்றல் மிளகாய் - 10
பெருங்காய தூள் - ½ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிதளவு.
செய்முறை:
முதலில் புழுங்கல் அரிசியை நன்றாக ஊறவைத்து, ஊறிய பின் தண்ணீர் வடித்து அதில் பொட்டுக்கடலை மாவு, மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து மைய அரைத்து ரிப்பன் அச்சில் போட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். இது ஒரு மாதம் வரை கெடாது.



