Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ரவா மீன் ஃப்ரை

தேவையான பொருட்கள்:

வஞ்சர மீன் - 8 துண்டுகள்

எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - 5 இலைகள்

வரமிளகாய் - 5

மல்லி - 1 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4

கசகசா - 1 டீஸ்பூன்

ஓமம் - 1 சிட்டிகை

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - 1/2 இன்ச்

சீரகம் - 1 டீஸ்பூன்

ரவை - 1 கப்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

*மீனை நன்கு சுத்தமாக கழுவி, அதனை உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி 10 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

*பின்னர் வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கசகசா, சீரகம் மற்றும் மல்லி ஆகியவற்றை தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

*பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை ஃப்ரிட்ஜில் உள்ள மீனில் நன்கு தடவி, மீண்டும் 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

*பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீனை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, அதில் உள்ள ப்ளேவர் எண்ணெயில் இறங்கும் வரை சிறிது நேரம் வதக்கி விட வேண்டும்.

*பின் ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து, ரவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான ரவா மீன் ப்ரை ரெடி.