Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

முள்ளங்கி துவையல்

தேவையான பொருட்கள்;

அவல்-1/4 கிலோ.

எண்ணெய்-2 தேக்கரண்டி.

சோம்பு-1 தேக்கரண்டி.

பூண்டு-5.

பச்சை மிளகாய்-2

வெங்காயம்-1

இஞ்சி-1 துண்டு.

கேரட்-1 கப்.

பீன்ஸ்-1 கப்.

குடை மிளகாய்-சிறிதளவு.

கருவேப்பிலை-சிறிதளவு.

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

கரம் மசாலா-1 தேக்கரண்டி.

முட்டை-4

உப்பு-1/2 தேக்கரண்டி.

கொத்தமல்லி-சிறிதளவு.

செய்முறை:

முதலில் ¼ கிலோ அவலை தண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1 தேக்கரண்டி சோம்பு, பூண்டு 5, பொடியாக நறுக்கிய 1 துண்டு இஞ்சி, சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் 2, நறுக்கிய வெங்காயம் 1 சேர்த்து வதக்கவும்.இத்துடன் சிறிதளவு நறுக்கிய குடை மிளகாய், சிறிதாக நறுக்கிய கேரட் 1 கப், சிறிதாக நறுக்கிய பீன்ஸ் 1 கப், கருவேப்பிலை சிறிது சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி, மிளகாய் தூள் 1 தேக்கரண்டி, கரம் மசாலா 1 தேக்கரண்டி, உப்பு ½ தேக்கரண்டி சேர்த்து பிரட்டிவிட்ட பிறகு 4 முட்டையை சேர்த்து பொரியல் மாதிரி செய்து அத்துடன் எடுத்து வைத்திருக்கும் அவலை சேர்த்துக்கொள்ளவும்.அவலை நன்றாக கிளறிவிட்ட பிறகு கொத்தமல்லி சிறிதளவு தூவி பரிமாறவும். சூப்பர் சுவையில் முட்டை அவல் உப்புமா தயார். காலை உணவுக்கு ஆரோக்கியமான இந்த ரெசிபியை செய்து சாப்பிடலாம். நீங்களும் இந்த ரெசிபியை வீட்டிலே ட்ரை பண்ணிப் பாருங்கள்.