Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பப்பட் சப்ஜி

தேவையானவை:

மிளகு அப்பளம் - 2,

தயிர் - அரை கப்,

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

சீரகத்தூள், தனியாத்தூள் - தலா கால் டீஸ்பூன்,

கடுகு, சீரகம் - சிறிதளவு,

கரம்மசாலாத்தூள் - 2 சிட்டிகை,

மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,

கொத்தமல்லி - சிறிதளவு,

எண்ணெய் - அரை டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தயிரைச் சேர்த்து மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம்மசாலாத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, தயிர் கலவையை சேர்க்கவும். அடுப்பை மெல்லிய தீயில் வைத்து 5 நிமிடம் கிளறவும். நான்காக நறுக்கிய மிளகு அப்பளத்தை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 3 நிமிடம் மெல்லிய தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.