Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பூசணி மசால்

தேவையானவை:

பூசணிக்காய் - அரை கிலோ

சீரகம் - ஒரு டீஸ்பூன்

அரிசி மாவு - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்துள் - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சமையல் எண்ணைய் - மூன்று டேபிள் ஸ்பூன்

பச்சைக்கொத்தமல்லி - சிறிதளவு

புதினா - சிறிதளவு

செய்முறை:

பூசணிக்காயின் தோலை சீவி விட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சிறிது சீரகத்தை பொரிய விடவும். சீரகம் பொரிந்ததும் பூசணிக்காய் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும்.அத்துடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பை மிதமான தீயில் எரிய விட்டு மூடி வைக்க வேண்டும்.சீரகம் அரை ஸ்பூன் எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பூசணிக்காய் வெந்ததும் அரிசி மாவை நன்றாக வதக்கி பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்தமல்லி, புதினாவுடன் சீரகத்தூளையும் தூவி அடுப்பில் இருந்து இறக்கவும்.