Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

உருளைக்கிழங்கு வெள்ளை குருமா

தேவையான பொருட்கள்:

அரைப்பதற்கு...

* பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

* சோம்பு -1 டீஸ்பூன்

* கசகசா -1 டீஸ்பூன்

* மல்லி -1 டீஸ்பூன்

* முந்திரி -7-8

* துருவிய தேங்காய் - 1 கப்

* தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* பட்டை - 2 துண்டு

* கிராம்பு - 4

* ஏலக்காய் - 3

* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)

* கறிவேப்பிலை - 1 கொத்து

* பச்சை மிளகாய் 4 (நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்

* வேக வைத்த உருளைக்கிழங்கு - 3 (மசித்தது)

* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)

* அரைத்த தேங்காய் விழுது

* தண்ணீர் - தேவையான அளவு

* உப்பு - சுவைக்கேற்ப

* கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலை, சோம்பு, கசகசா, மல்லி, முந்திரி, துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து எடுத்து, தோலுரித்து மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்னர் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க வேண்டும்.

* அதன் பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் வேக வைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறி, நறுக்கிய தக்காளியை சேர்த்து கிளறி, விட வேண்டும்.

* பின்பு அதில் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், உருளைக்கிழங்கு வெள்ளை குருமா தயார்.