தேவையானவை:
உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் - தலா 1
சோள மாவு, மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தழை, உப்பு - தேவையான அளவு
பொரித்த சோள வத்தல் - தேவைக்கு.
செய்முறை: உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் சோள மாவு கரைத்து ஊற்றி, கொத்தமல்லி, உப்பு போட்டு கொதிக்க விடவும். கடைசியில் பொரித்த சோள வத்தலை பொடித்துப் போட்டு மிளகுத்தூளை மேலே தூவவும். சுவையான உருளைக்கிழங்கு சூப் ரெடி.


