தேவையானவை:
உருளைக்கிழங்கு - 1
ஜவ்வரிசி - 100 கிராம்
சோளமாவு, நெய் - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 200 கிராம்
கோவா - 100 கிராம்
ரோஸ் எசென்ஸ், சோடா மாவு - சிறிதளவு
முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி- தேவையான அளவு.
செய்முறை: முதலில் வேகவைத்த உருளைக்கிழங்கு, ஜவ்வரிசியை மிக்ஸியில் அரைத்து அதனுடன், சோள மாவு சேர்த்து வாணலியில் போட்டு கிளற வேண்டும். சர்க்கரை, நெய், சோடா மாவு, ரோஸ் எசென்ஸ் சேர்த்துக் கிளறி, அல்வா பதம் வந்தவுடன், நெய் தடவிய தட்டில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் பொடி சேர்த்து போட்டு, துண்டுகள் போடவும். உருளைக்கிழங்கு அல்வா ரெடி.


