Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

2/4கிலோ பொன்னாங்கண்ணி கீரை

1/4கப் சாம்பார் வெங்காயம்

1/4 கப் தேங்காய் துருவல்

தேவையான அளவு உப்பு

தாளிக்க:

1டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்

1/4டீஸ்பூன் கடுகு

1/2டீஸ்பூன் உளுந்து பருப்பு

1/2டீஸ்பூன் கடலை பருப்பு

பச்சை மிளகாய்

செய்முறை:

கீரையை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.கீரை,வெங்காயம் பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி வைக்கவும்.தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம், வற்றல் சேர்த்து நன்கு வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள கீரையை சேர்த்து கலந்து விடவும். பின்பு தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் வதக்கவும்.கீரை நன்கு வெந்து தண்ணீர் இல்லாமல் வற்றி வரும் போது தேங்காய் துருவல் சேர்த்து கலந்து, இறக்கினால் பொன்னாங்கண்ணி கீரை பொரியல் தயார். தயாரான கீரை பொரியலை எடுத்து ஒரு பரிமாறும் பௌலில் சேர்க்கவும். இப்போது மிகவும் சுவையான, சத்தான பொன்னாங்கண்ணி கீரை பொரியல் சுவைக்கத்தயார்.