Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

அவல் வெஜ் வடை

தேவையானவை:

மெல்லிய அவல் - 200 கிராம்,

புளித்த தயிர் - 50 மில்லி,

சீரகம், பெருங்காயம்,

உப்பு - தலா 1 டீஸ்பூன்,

துருவிய உருளைக்கிழங்கு, கேரட் - தலா ¼ கப்,

அரிசி மாவு - 2 ஸ்பூன்,

பச்சை மிளகாய் - 4,

கொத்தமல்லி - சிறிதளவு,

எண்ணெய் - ¼ கிலோ.

செய்முறை:

அவலை நன்றாக கழுவி வடிகட்டி, அதனுடன் காய்கறி துருவல், நறுக்கிய கொத்தமல்லித்தழை, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, சீரகம், உப்பு, பெருங்காயம், அரிசி மாவு, புளித்த தயிர் சேர்த்து பிசையவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து கெட்டியாக வடை மாவு பதத்தில் பிசைந்து கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி, வடைகளாக தட்டி, எண்ணெயில் பொரிக்கவும்.