Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பைனாப்பிள் ரசம்

தேவையான பொருட்கள்:

பைனாப்பிள்-2 கப்

சீரகம்-1 தேக்கரண்டி

மல்லி-1 தேக்கரண்டி

வரமிளகாய்-2

துவரம் பருப்பு-1 தேக்கரண்டி

மிளகு-1 தேக்கரண்டி

மஞ்சள் தூள்-1/4 தேக்கரண்டி

தக்காளி-1

புளி-நெல்லிக்காய் அளவு

உப்பு-தேவையான அளவு

கொத்தமல்லி-சிறிதளவு

செய்முறை:

முதலில் பைனாப்பிளை சின்ன சின்ன துண்டுகளாக 2 கப் அளவிற்கு நறுக்கி வைத்துக்கொள்ளவும். இப்போது கடாயில் சீரகம் 1 தேக்கரண்டி, துவரம் பருப்பு 1 தேக்கரண்டி, மிளகு 1 தேக்கரண்டி, மல்லி 1 தேக்கரண்டி, வரமிளகாய் 2 சேர்த்து நன்றாக வறுத்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.இப்போது கடாயில் நெல்லிக்காய் அளவு கரைத்து வைத்த புளி தண்ணீரை சேர்த்துவிட்டு நறுக்கிய தக்காளி 1, மஞ்சள் தூள் ¼ தேக்கரண்டி, அரைத்து வைத்த பொடி ஆகியவற்றை சேர்த்துவிட்டு நன்றாக கலந்துவிட்டுக் கொள்ளவும். நறுக்கிய பைனாப்பிளை இத்துடன் சேர்த்துவிட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும். கடைசியாக, கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான பைனாப்பிள் ரசம் தயார்.