Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

அன்னாசிப் பழ பாயசம்

தேவையானவை:

இனிப்புள்ள பெரிய அன்னாசிப்பழம் - 1 (துருவியது)

பால் - ½ லிட்டர்

சர்க்கரை - 300 கிராம்

வாதுமைப் பருப்பு - 20 (ஊறவைத்து தோலுரித்து அரைத்த விழுது)

பேரீச்சம் பழம் - 10 (கொட்டை நீக்கி சிறு சிறு துண்டு)

குங்குமப்பூ - சிறிது.

செய்முறை:

முதலில் துருவிய அன்னாசிப் பழத்தை தண்ணீர் விட்டு பிசைந்து மெல்லிய துணியில் வடிகட்டி சாற்றை ஒரு பாத்திரத்தில் பிழிந்து கொள்ளவும். பிறகு சர்க்கரையை அன்னாசிப் பழச் சாற்றில் கலந்து அடுப்பில் வைத்து நிதானமாக சிறு தீயில் அடிப்பிடிக்காமல் கிளறி, கலவை கெட்டியானதும் இறக்கவும். வேறு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் அரைத்த வாதுமைப் பருப்பு வெந்ததும் இறக்கி தயாராக இருக்கும் அன்னாசிப் பழச் சாற்றில் கலந்து, பேரீச்சைத் துண்டுகளை அதோடு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறலாம்.