Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மிளகு குழம்பு

தேவையான பொருட்கள்:

வறுத்து அரைப்பதற்கு

நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு - 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

வெந்தயம் - 10

வரமிளகாய் - 2

சீரகம் - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

தாளிப்பதற்கு

நல்லெண்ணெய் - 3 டேபிள் டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

வெந்தயம் - 10

மிளகு- 10

உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

வரமிளகாய் - 2

பூண்டு - 5 பல்

சின்ன வெங்காயம் - 6-7 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை - 1 கொத்து

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

புளி - 1 எலுமிச்சை அளவு (நீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மிளகு, மல்லி, துவரம் பருப்பு, வெந்தயம், வரமிளகாய், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து நல்ல மணம் வரும் வரை நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.பின்பு மிக்சர் ஜாரில் வறுத்து குளிர வைத்த பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு புளியை சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், மிளகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு பற்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பின்பு அதில் பெருங்காயத் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.அதன் பின் புளிச்சாற்றினை ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மூடி வைத்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, சுவை பார்த்து, குழம்பு மிகவும் புளிப்பாக இருந்தால், சிறிது வெல்லத்தை சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான மிளகு குழம்பு தயார்.