தேவையானவை
காளான் - 500 கிராம்
பெரிய வெங்காயம் - 3
மிளகு, சீரகத்தூள் - தலா 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
கறிமசாலா தூள் -1 தேக்கரண்டி
தக்காளி - 2
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க
எண்ணெய் - தேவைக்கேற்ப
சோம்பு - 1 தேக்கரண்டி
பட்டை - 1 துண்டு
நறுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவற்றை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்கவும். பின்னர், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, மிளகு, சீரகம், மஞ்சள்தூள், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். தண்ணீர் லேசாக ஊற்றி, கொதிவரும் போது உப்பு, வெட்டி வைத்திருக்கும் காளான் போட்டு சுண்ட வதக்கி இறக்கி விடவும். இதன்மீது பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறவும்.


