தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் - 20
பூண்டு - 5 பல்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
உப்பு - சுவைக்கேற்ப
கறிவேப்பிலை - சிறிது
வெல்லம் - 1 டீஸ்பூன்
மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
வரமிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் புளியை 3/4 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு மசாலா பொடிக்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் மிளகு மசாலா பொடி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து இறக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான மிளகு குழம்பு தயார்.


