Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மிளகு பூண்டு சூப்

தேவையானவை

கொரகொரப்பாக

அரைத்த மிளகு - 1 தேக்கரண்டி

சுக்குப் பொடி - 1 தேக்கரண்டி

பூண்டுப் பல் - 5

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

சின்ன வெங்காயம் - 2

கொத்துமல்லி,

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கேற்ப

நெய் - அரை தேக்கரண்டி.

செய்முறை:

முதலில் வாணலியில் நெய்விட்டுச் சூடானதும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். அதில் தக்காளி, மஞ்சள் தூள், மிளகுப் பொடி, சுக்குப் பொடி, கொத்துமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். பின்னர் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். சூப் கலவை நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவுக்குக் குறைந்ததும் அடுப்பை அணைத்து மூடிவிடுங்கள். பின்பு மிதமான சூட்டில் வடிகட்டிப் பருகுங்கள். இப்போது மழைக்கு இதமான மிளகு சூப் தயார்.