Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மிளகு சீரக சாதம்

​தேவையான பொருட்கள்

வடித்து ஆறவைத்த சாதம் - 2 கப்

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி - 7

பெருங்காயம் - ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை - ஒரு கொத்து

உப்பு - தேவையான அளவு.

​

செய்முறை

​மிளகு மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து கொரகொரப்பாக பொடி செய்து கொள்ளவும். நெய்யில் முந்திரி, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். சாதத்துடன் பொடித்த மிளகு சீரகம், உப்பு மற்றும் தாளித்த பொருட்களைச் சேர்த்து நெய் மணக்க கிளறவும்.