தேவையானவை:
கம்பு மாவு - ¼ கிலோ (வறுத்து மிஷினில் அரைத்தது)
சர்க்கரை - ¼ கிலோ (பொடித்தது)
ஏலக்காய் தூள் - ½ ஸ்பூன்
திராட்சை - 10
முந்திரி - 10 (பொடித்தது)
நெய் (அ) டால்டா - ¼ கிலோ.
செய்முறை:
முதலில் அரைத்து வைத்துள்ள கம்பு மாவு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றாக கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றிக் காய்ந்ததும் சிறிது சிறிதாக எடுத்து மாவுக்கலவையில் ஊற்றி, சுடச்சுட உருண்டைப் பிடிக்க வேண்டும். நெய்யை இளம் சூடாகவே ஊற்ற வேண்டும். சூடு ஆறினால் உருண்டைப் பிடிக்க வராது.



