Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேர்க்கடலை குழம்பு

தேவையான பொருட்கள்

எண்ணெய்-2 தேக்கரண்டி.

கடுகு-1தேக்கரண்டி.

சீரகம்-1 தேக்கரண்டி.

வெந்தயம்-1 தேக்கரண்டி.

பூண்டு-5.

சின்ன வெங்காயம்-10

தக்காளி-1.

பச்சை மிளகாய்-2

கருவேப்பிலை-சிறிதளவு.

உப்பு-தேவையான அளவு.

மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.

மிளகாய் தூள்-1 தேக்கரண்டி.

மல்லித்தூள்-1 தேக்கரண்டி.

வேர்க்கடலை-1/4 கிலோ.

தேங்காய்-1/4 மூடி.

புளி-நெல்லிக்காய் அளவு.

செய்முறை

முதலில் கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, வெந்தயம் 1 தேக்கரண்டி, பூண்டு 5, சின்ன வெங்காயம் 10 சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவும்.இப்போது இதில் கருவேப்பிலை சிறிதளவு, பச்சை மிளகாய் 2, நறுக்கிய தக்காளி 1, கல் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது 1 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 1 தேக்கரண்டி மல்லித்தூள் சேர்த்து கலந்துவிட்டு ¼ கிலோ வேர்க்கடலையை கழுவி சேர்த்து எண்ணெய்யில் வதக்கவும்.ஒரு நெல்லிக்காய் அளவு புளியை கரைத்து ஊற்றிக்கொள்ளவும். மிக்ஸியில் ¼ மூடி தேங்காயை அரைத்து சேர்த்துக் கொள்ளவும். இப்போது குழம்பில் எண்ணெய் பிரிந்து வரும்வரை வைத்து இறக்கவும். சுவையான வேர்க்கடலை குழம்பு தயார்.