Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

பட்டாணி க்ரீன் மசாலா

தேவையானவை:

பச்சைப் பட்டாணி - ஒரு கப்,

வெங்காயம் - 2,

தக்காளி - ஒன்று,

கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு,

பச்சை மிளகாய் - 3,

முந்திரிப் பருப்பு - 5,

தயிர் - ஒரு டேபிள்ஸ்பூன்,

கஸ்தூரி மேத்தி (உலர்ந்த வெந்தயக்கீரை) - 2 சிட்டிகை,

பூண்டு - 2 பல்,

பால் - அரை கப்,

கரம் மசாலாத்தூள் - 2 சிட்டிகை,

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

பச்சைப் பட்டாணியை குக்கரில் வேகவைத்துக் கொள்ளவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லியை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கி அரைத்துக்கொள்ளவும். முந்திரிப் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து தயிருடன் சேர்த்து அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் விட்டு, அரைத்த விழுதுகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து, கரம் மசாலாத்தூள் சேர்த்து வதக்கி, பால் சேர்க்கவும். சிறிதளவு தண்ணீரும் சேர்க்கவும். இதில் வெந்த பட்டாணி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு, கஸ்தூரி மேத்தி சேர்த்து, சூடாகப் பரிமாறவும்.