Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பப்பாளி கார புலாவ்

தேவையான பொருட்கள்

பாசுமதிஅரிசி – 1 கப்

பப்பாளிகாய் – 1 கப் (சிறிதாக நறுக்கியது)

காரட் – 1/2 கப் (நறுக்கியது)

மிளகாய் – 2 (நறுக்கியது)

பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)

தக்காளி – 1 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

மஞ்சள்த்தூள் – ½ டீஸ்பூன்

சீரகத்தூள் – ½ டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டீஸ்பூன்

நெய் – 1 டீஸ்பூன்

தண்ணீர் – 2 கப்

கொத்தமல்லி, புதினா இலைகள் – ஒரு கைப்பிடி

செய்முறை:

பாசுமதி அரிசியை சுத்தம் செய்து 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து சூடாக்கவும். வெங்காயம், மிளகாய், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பப்பாளித் துண்டுகள், காரட், தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், சீரகத்தூள் மற்றும் உப்பை சேர்த்து நன்றாக கலக்கவும். 2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அரிசியை சேர்த்து நன்றாக கலக்கி குறைந்த தீயில் மூடி வைத்து 15-20 நிமிடங்கள் சமைக்கவும். இறுதியாக கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் சேர்த்து அலங்கரிக்கவும்.பப்பாளி கார புலாவ் தயார். குருமா அல்லது தயிர் பச்சடி போன்றவையுடன் பரிமாறலாம்.