தேவையான பொருட்கள்:
3/4 கப் துருவிய மென்மையான பன்னீர்
1/2 கப் சர்க்கரை
3 கப் பால்
பொடியாக நறுக்கிய பிஸ்தா மற்றும் பாதாம்
கால் ஸ்பூன் ஏலக்காய் தூள்
ஒரு சிட்டிகை உப்பு
1 ஸ்பூன் நெய்
செய்முறை:
ஒரு அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, மிதமான தீயில் சூடாக்கவும்.
நெய் சூடானதும், அதில் சர்க்கரையைச் சேர்த்து, மிதமான தீயில் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும்.
சர்க்கரை உருகி, வெளிர் நிறமாக மாறத் தொடங்கும் வரை கிளறவும்.
சர்க்கரை முழுமையாக உருகி, அதன் பாகு நிறம் மாறும்போது அதாவது வெளிர் நிற வெல்லப்பாகு போல மாறுவதுதான் கேரமல் ஆகும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, சூடான பாலை கவனமாகச் சேர்க்கவும்.
பால் பொங்கி நுரைத்து வரும்வரை காத்திருக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து பாயசம் நன்றாகக் கொதிக்கட்டும். அவ்வப்போது நன்றாகக் கலக்கிவிடவும்.
பின்னர் ஏலக்காய் தூள் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து, நன்றாகக் கலந்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
அதன்பின் நன்றாக துருவிய பன்னீரை சேர்த்து, அவ்வப்போது கலக்கியபடியே 2-3 நிமிடங்கள் பாயசத்தைக் கொதிக்கவிடவும்.
அதேசமயம் ஒரு கடாயில் நெய் ஊற்றி அதில் பிஸ்தா மற்றும் பாதாம் பருப்பை சேர்த்து வறுக்கவும்.
இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் வறுத்து வைத்துள்ள பிஸ்தா, பாதாம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

